Skip to content

புதுகை- பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை

.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் அபர்ணா ,இவரது கணவர் கலை ராஜன் இவர்பு புதுக்கோட்டையில் கம்யூட்டர் சென்டர் வைத்துள்ளார். இவர்களது வீடு புதுக்கோட்டை கம்பன் நகர் பகுதியில் உள்ளது.இருவரும் நேற்று பணிக்கு சென்று விட்டனர். வீட்டில் கலைராஜன் தாயார் தமிழ்செல்வி வயது 65, இவர் மட்டும் இருந்துள்ளார். இவர் வீட்டின் பின்புறம் வேலைபார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது வீட்டினுள் சத்தம் கேட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து வீட்டினுள் தமிழ்செல்வி பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு கிடந்தது அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மகன், மருமகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அவர்கள் விரைந்து வந்து வீட்டில் பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 30பவுன் தங்க நகைகள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக புதுக்கோட்டை டவுன்
போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த டவுன் போலீஸார். கைரேகைகளை பதிவு செய்தனர். பின்னர் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது
வீட்டினுள் இருந்து பெண் ஒருவர் கையில் பையுடன் வெளியில் சென்றது தெரியவந்துள்ளது.
அந்தப் பெண்ணை தேடிவருகிறார்கள்.

error: Content is protected !!