Skip to content

புதுகை- சத்துணவு ஊழியர்கள் 700 பேருக்கு மேல் கைது

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத் தலைநகரான புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜகோபாலன் மாவட்ட பொருளாளர் பிச்சை முத்து, மாநில மேனாள் பொதுச்செயலாளர் மலர்விழி ஆகியோர் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாங்க ஊழியர்களாக பணி புரியும் மற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் தங்களுக்கும் காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
பணிக்கொடை அமைப்பாளருக்கு ரூபாய் 5 லட்சமும் சமையல் உதவியாளருக்கு ரூபாய் மூன்று லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்துஇந்த

ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இதே போல் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அதற்குள் அரசாங்கம் தங்களது சங்கப் பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் எதிர்வரும் 25ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் எனவும் மாவட்ட தலைவர்பாஸ்கர், மற்றும்

மலர்விழிதெரிவித்திருக்கிறார்கள். அனுமதியின்றி சாலை மறியல் செய்ய முயன்றதாக புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் சுகுமாறன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 700 க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை கைது செய்து காவல் வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்று தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

error: Content is protected !!