Skip to content

புதுக்கோட்டையில் தொழிற்சங்கத்தினர் மறியல்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,  பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு, பழைய பென்சன் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று தொழிற்சங்கத்தினர்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தமிழ்நாட்டில் ஆங்காங்கே தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை யில்அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர்
தலைமை தபால்நிலையம் முன்பு ஒன்றிய அரசைக் கண்டித்துமறியலில் ஈடுபட்டனர்.இதில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக பஸ்நிலையத்தில் இருந்து பேரணியாக வந்தனர்.இந்த மறியலில்
எல்.பி.எப், சி.ஐ.டியூ, ஏ.ஐ.டி.யூ.சி ,ஏ.ஐ.சி.சி.டி.யூ,யூ.டி.யூ.சி, உள்ளிட்ட தொழிற்சங்கநிர்வாகிகள்,தொழிலாளர்கள் பங்கேற்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர்.

error: Content is protected !!