திருச்சியில் தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் மரக்கடை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தரைக் கடை சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன், தரைக்கடை மாவட்ட செயலாளர் செல்வி,நிர்வாகிகள் புஷ்பா காரன், ஷேக்மொய்தீன், அப்துல்லாஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கடந்த 13 ந்தேதி மரக்கடையில் த வெ.க.தலைவர் விஜய் நடத்திய பிரச்சார பொதுக்கூட்டத்தில் மர சாமான்களை சேதப்படுத்தி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -பொருட்களை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களின் பொருட்கள் சேதத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிரச்சாரத்தை திட்டமிடாமல் நடத்திய விஜயை கண்டித்தும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினார்கள். .
விஜய்-தவெக நிர்வாகிகளை கண்டித்து… திருச்சியில் தள்ளுவண்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
- by Authour
