Skip to content

தமிழக ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் மார்ச் 12-ல் பதவி ஏற்பு

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து கேரள கவர்னர் ஆர்.வி.ஆர்லேகர் தமிழக கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து ஆர்.வி.ஆர்லேகர் நாளை மறுநாள் சென்னைக்கு வருகிறார். அதே நாளில் ஆர்.என்.ரவி, தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து செல்கிறார். அவரை கவர்னர் மாளிகை அதிகாரிகளும், ஊழியர்களும் வழியனுப்பி வைக்கிக்கின்றனர்.

இதையடுத்து தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பேற்கும் ஆர்.வி.ஆர்லேகர் 12-ம் தேதி மதியம் 12 மணியளவில் பதவி ஏற்கிறார். ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த பதவி ஏற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற உள்ளது.

error: Content is protected !!