Skip to content

சாவர்க்கர் எங்களது கடவுள் உத்தவ் தாக்கரே பதிலடி.. சரத்பவார் ராகுலுக்கு அட்வைஸ்…

எம்.பி. பதவியை இழந்த ராகுல் காந்தி நிருபர்களிடம் …  “நான் காந்தி, சாவர்க்கர் அல்ல, காந்திகள் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்’’ என்றார்.  இந்த பேச்சு காங்கிரசின் கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ராகுலின் சாவர்க்கர் குறித்த பேச்சுக்கு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.. சாவர்க்கரை இழிவுபடுத்துவதை எப்போதும் சகித்துக் கொள்ள மாட்டோம். சாவர்க்கர் எங்களின் கடவுள். அவரை அவமரியாதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் போராட தயாராகிக் கொண்டு இருக்கிறோம்.  அவரை இழிவுபடுத்தி பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே நாங்கள் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் (என்சிபி) கூட்டணி வைத்திருக்கிறோம். ஆனால் ராகுல் காந்தி எங்களை சீண்டும் வகையில் பேசி இருக்கிறார்.” என்றார் கோபமாக கருத்து தெரிவித்துள்ளார்.. அதேேபோஸ் சரத் பவார் ராகுலுக்கு அட்வைஸ் செய்து இருக்கிறார்.. மகாராஷ்டிராவில் மிகவும் மரியாதைக்குரிய நபராக போற்றப்படும் சாவர்க்கரை ராகுல் குறிவைப்பது சரியல்ல.. சாவர்க்கர் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்) உறுப்பினராக இருந்ததில்லை. மேலும் எதிர்க்கட்சிகளின் உண்மையான போராட்டம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிஜேபியுடன் மட்டும்தான். எனவே உணர்ச்சி ரீதியா பிரச்சினைகளைப் பற்றி பேசுவதைத் தவிர்த்து, உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று ராகுல் காந்திக்கு அறிவுறுத்தியுள்ளார் சரத் பவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!