Skip to content

கார்த்திக் சிதம்பரத்தை அசிங்கப்படுத்திய ராகுல்காந்தி.. வைரலாகும் வீடியோ..

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்துள்ளார். இனி அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. அவரின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதாகவும், வயநாடு தொகுதி காலி ஆகிவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கடுமையான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது.  இந்த நிலையில் இன்று பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல் காந்தி வந்திருந்தார். ராகுல் காந்தியின் வருகையின் போது அவரை வரவேற்க காங்கிரஸ் எம்பிக்கள் பலரும் காத்து இருந்தனர்.

படிகளில் ஏறிய ராகுல்காந்தி எதிரில் வந்திவர்களிடம் கை கொடுத்துவந்தார். அந்த வகையில் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரமும் படிகளில் இறங்கி வந்தார். அவரிடம் கார்த்தி கை கொடுத்தார். அவரிடம் ராகுல் காந்தி கைகொடுக்கவில்லை. அவர் கை கொடுக்க கையை நீட்டிய போது ராகுல் காந்தி கை கொடுக்காமல் முகத்தை திருப்பிக்கொண்டு சென்று விட்டார். கார்த்தி சிதம்பரம் அதிர்ச்சியாகி இறங்கி வந்து விட்டு திரும்பி பார்த்தார். ஆனால் ராகுல் எதையும் கண்டுக்கொள்ளாமல் உள்ளே சென்று விட்டார்.  எதற்காக கார்த்தி சிதம்பரத்தை ராகுல் காந்தி தவிர்த்தார். ஏன் அவரை அருகில் வந்தும் கூட முகம் கொடுத்து பார்க்காமல் ஒதுங்கி சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு இருக்கிறதா? அல்லது வேறு எதுவும் மோதல் இருக்கிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!