விஜய் தனது ஜனநாயகன் படன் தான் கடைசி என்றும் , அதன் பிறகு முழு நேர அரசியல் பணியில் ஈடுப்பட போவதாக அறிவித்தார். இந்த சூழலில், ஜன நாயகன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. தவெக தலைவர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாகியது.
ஏற்கெனவே இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து, விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இப்படி இருக்கையில் ராகுல் காந்தியே நேரடியாக விஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளார்.
ஜனநாயகன் படத்தை ஒன்றிய அரசு முடக்க முயற்சிப்பது தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல். தமிழர்களின் குரலை உங்களால் ஒருபோதும் ஒடுக்க முடியாது மிஸ்டர் மோடி என ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார்.ஜன நாயகன்’ படத்தைத் தடுப்பதற்காக தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் முயற்சிக்கிறது என்றும், மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முயற்சி தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் எனவும் ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார்.

