ஸ்டேட் பேங்கில் சம்பள கணக்கு வைத்துள்ள ரெயில்வே ஊழியர்களுக்கு ரூ. 1 கோடிக்கு விபத்து காப்பீடு வழங்கப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார். இது தற்போதுள்ள விபத்து காப்பீட்டு அதிகபட்ச தொகையான ரூ. 1.20 லட்சத்தை விட பல மடங்கு அதிகமாகும். அதேபோல், ஸ்டேட் பேங்கில் சம்பள கணக்கு வைத்துள்ள ரெயில்வே ஊழியர்கள் ரூ. 10 லட்சத்திற்கான இயற்கை மரணம் காப்பீட்டையும் பெற்றுக்கொள்ளலாம் என்று ரெயில்வே மந்திரி அறிவித்துள்ளார். இந்த காப்பீட்டிற்கு தவணை தொகை செலுத்த தேவையில்லை, ரெயில்வே ஊழியர்கள் எந்தவித மருத்துவ பரிசோதனையோ செய்ய தேவையில்லை என்று ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ரெயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ரயில்வே ஊழியர்களுக்கு ரூ. 1 கோடிக்கு விபத்து காப்பீடு
- by Authour
