சென்னை தாம்பரம் அருகே மூத்த தம்பதிகள் தவிரவிட்ட நகை பையை உடனடியாக மீட்டு கொடுத்த ரயில்வே பெண் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளரை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (65) இவர் தனது மனைவியுடன் இன்று மாலை தாம்பரத்தில் இருந்து ரயில் மூலம் திருச்செந்தூர் சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு அருகே சென்றுகொண்டிருந்த போது வாசுதேவன் மனைவி நகை பையை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தவர் உடனடியாக தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து நடைமேடை 8ல் தவிர விட்டிருந்த கைப்பையை ரோந்து பணியில் இருந்த ரயில்வே உதவி ஆய்வாளர் கோகிலம் பத்திரமாக கைப்பற்றி வாசுதேவன் மற்றும் அவர் மனைவியிடம் ஐந்து சவரன் தங்க நகை மற்றும் 1000 ரொக்க பணத்தை ஒப்படைத்தார். உடனடியாக செயல்பட்டு நகைகளை மீட்டெடுத்த ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் கோகிலத்தை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
தாம்பரம் அருகே … தவறவிட்ட நகை பையை மீட்டு தந்த ரயில்வே போலீஸ்… பாராட்டு
- by Authour
