Skip to content

கீரனூாில் ரயில்வே மேம்பாலம் வேண்டும்- அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

திருச்சி தொகுதி எம்.பியும்,  மதிமுக முதன்மை செயலாளருமான  துரைவைகோ, டெல்லியில் ரயில்வே அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவை  சந்தித்து  திருச்சி மக்களவை தொகுதியில் உள்ள  ரயில்வே  தொடர்பான பல திட்டங்கள் குறித்து பேசினார். இது தொடர்பாக துரை வைகோ கூறியதாவது:

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து,  திருச்சி நாடாளுமன்ற தொகுதியில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள, எல்.சி. எண் 355, கீரனூர் – திருச்சி–காரைக்குடி பிரிவில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான கோரிக்கை கடிதத்தை கொடுத்தேன்.

அதில், திருச்சி–காரைக்குடி பிரிவில் உள்ள கீரனூரில் அமைந்துள்ள MLC எனப்படும் Manned Level Crossing LC No 355 இல் ரயில் பாதை சாலை சந்திப்பில் (Railway crossing) பாலம் (ROB) கட்டுவதற்கு அவசரத் தேவை உள்ளதை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றேன்.

இந்த Railway Crossing கீரனூரிலிருந்து திருவெறும்பூருக்கு செல்லும் முக்கிய இணைப்பு பகுதியில் உள்ளது மட்டுமல்லாமல், சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 45 கிராமங்கள் கீரனூருக்குள் நுழையும் முதன்மை வழியாகவும் உள்ளது. இந்தப் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் பயணிகளின் அதிக அளவு போக்குவரத்து, இந்த railway crossing பகுதியில் சிக்கிக்கொண்டு பெரும் நெரிசலையும், அதனால் தாமதங்கள் மற்றும் விபத்து அபாயங்களையும் ஏற்படுத்துகிறது என்பதை சுட்டிக்காட்டினேன்.

இது கிராமப்புற சமூகங்களை, சந்தைகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், மற்றும் தொழிலகங்களை நேரடியாக இணைக்கிறது. எனவே, இந்த வழித்தடத்தின் சமூக-பொருளாதார முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ரயில்வே மேம்பாலம் கட்டுவது அவசியமாகும் என்பதை விளக்கினேன்.

இது ஆயிரக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களின் பயண நேரத்தை குறைக்கும் என்றும் எடுத்துரைத்தேன்.

எனவே, எல்.சி. எண் 355, கீரனூரில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்கி, அதை விரைவாக செயல்படுத்துமாறு ரயில்வே அமைச்சரை கேட்டுக்கொண்டேன்.

இந்த கோரிக்கையை பரிசீலித்து, ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர்  பதிலளித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

error: Content is protected !!