Skip to content

கனமழை…..பாலிடெக்னிக், ஐடிஐ தேர்வுகள் ஒத்திவைப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக இன்று 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், தமிழகத்தில்பெய்து வரும் கனமழை காரணமாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த  டிப்ளமோ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஐடிஐ மாணவர்களுக்கு இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு தேர்வு தேதி dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பின்னா் அறிவிக்கப்படும்.

இதுபோல அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!