Skip to content

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய மழை நிலவரம் (ஜனவரி 1):தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அடுத்த சில நாட்களுக்கான முன்னறிவிப்பு:

ஜனவரி 2: வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டமும் காணப்படும்.

ஜனவரி 3: தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். இருப்பினும் வடதமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

ஜனவரி 4 முதல் 6 வரை: தமிழகம் மற்றும் புதுவையில் மழை குறைந்து பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.சென்னை நிலவரம்:சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்ஸியஸாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!