தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைக்கிறது. வரும் 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாகவே வெயில் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. திருவாரூர், மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 30 நிமிடத்துக்கும் மேலாக கனமழை கொட்டியது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து நகரங்கள் குளிர்ந்து காணப்பட்டது.