கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளான ஆரியூர், அணைப்பாளையம், நெடுகூர், காட்டுமுன்னுர், குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரமாக மழை பெய்தது. க.பரமத்தி பகுதியில் அரை மணி நேரம் பெய்த மழைக்கு கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் மழை
நீர் குளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மழைக் காலங்களில் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவு மழை நீர் தேங்குவதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அதிகாரிகள் ஆய்வு செய்து தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்