கரூர் மாவட்டம், முழுவதும் இரண்டாவது நாளாக காலை முதல் மிதமான மழை முதல் கனமழை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டு பகுதியான ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள பகுதிகளில் கனமழையால் பொதுமக்கள் வீட்டின் முன்பும் மற்றும் சாலையில் மழை நீர் சூழ்ந்து வீட்டை விட்டு வெளியில் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அவதி

அடைந்துள்ளனர். கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டு பகுதிகளில் இதுபோல் மழை பெய்தால் அடிக்கடி வீடுகளை மழை நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுவதாகவும், மேலும் வீட்டின் முன்புற நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் நீர் சூழ்ந்ததால் பழுது ஏற்பட்டுள்ளது. உடனடியாக கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நிர்வாகம் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை.

