அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகியாக இருந்தவர் வி.எம். சுதாகர் . இவர் நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். இத்தகவலை ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் இன்று தகவல் தெரிவித்தது. இந்நிலையில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு வட சென்னை மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். இதனை
தொடர்ந்து நடிகர் ரஜினி தனது டிவிட்டரில் …. என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைட்டும் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.