மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழ்நாட்டைப் போலவே தெலுங்கானாவிலும் மக்கள்நல கல்வித் திட்டங்களை அமல்படுத்துவதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது என்று கமல்ஹாசன் கூறினார்.
.நடிகர் ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்து திரைப்படத்தில் நடிப்பது குறித்த கேள்விக்கு, கமல்ஹாசன் ஆர்வத்துடன் பதிலளித்தார். “ரஜினியும் நானும் கண்டிப்பாக மீண்டும் இணைந்து நடிப்போம். ஏற்கனவே நாங்கள் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறோம். ஆனால், மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு நான் ஆவலாக இருக்கிறேன்,” என்று கூறினார்.
ஏற்கனவே, இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி இருந்தது. இது குறித்து பேசிய ரஜினிகாந்த் ” ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ஸ்க்கு சேர்ந்து ஒரு திரைப்படம் செய்யப்போகிறேன். அந்த படத்திற்கு இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நானும் கமல்ஹாசனும் இணைந்தது நடிக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசை. எனவே, அதற்கு ஏற்றது போல கதாபாத்திரம் கிடைத்தது என்றால் நிச்சயமாக நடிப்பேன்.
ஆனால், அந்த படத்திற்கான ஐடியா அப்படியே இருக்கிறது. இன்னும் கதாபாத்திரம் இயக்குனர் யார் என்பது தேர்வு செய்யப்படவில்லை” எனவும் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். அவரை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனும் இந்த விஷயத்தை பேசியிருக்கிறார்.
மேலும், மேலும், தமிழ்நாடு நீண்ட காலமாக கல்வி மற்றும் சமூக நலத் திட்டங்களில் முன்னோடியாக இருந்து வருவதாகவும், இந்த முயற்சிகளை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.கமல்ஹாசன் மேலும் கூறுகையில், “தமிழ்நாட்டில் அன்னக் கொடி பறந்து நீண்ட காலமாகிவிட்டது. அதை மறுபடியும் உயரப் பறக்க வைத்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த முயற்சிகளை தெலுங்கானா போன்ற மாநிலங்கள் பின்பற்றுவது, தமிழ்நாட்டின் கல்வி மற்றும் நலத் திட்டங்களின் தாக்கத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது,” என்று உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.