Skip to content

With Love படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் இணைந்துஅறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வித் லவ்’ (With Love) எனும் திரைப்படத்தில் ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சரவணன், தேனி முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பாளராக K. சுரேஷ்குமார் பணியாற்றியுள்ள நிலையில், கலை இயக்கத்தை ராஜ் கமல் செய்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வித் லவ் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

வித் லவ் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 11 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், வித் லவ் திரைப்படம் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தப் படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார்.

படக்குழுவுடன் நடிகர் ரஜினிகாந்த் உரையாடியது, அவர்களை வெகுவாக பாராட்டியது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோவை சௌந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

error: Content is protected !!