தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75 வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்த நாளை முன்னிட்டு ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பினரும் ரஜினிகாந்த்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும் ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தனர். ரஜினிகாந்த், தனது பிறந்த நாளை ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடினர். இந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான்

கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தனது மனைவி லதா, மகள்கள் மற்றும் பேரன்களுடன் ரஜினிகாந்த் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த ரஜினியை பார்த்த ரசிகர்கள், உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். அவர்களை பார்த்து ரஜினி கை அசைத்தப்படி சென்றார்.

