Skip to content

ராஜ்கோட் 3வது ஒன்டே…… ஆஸ்திரேலியா ரன் குவிப்பு

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர், மிட்செல் மார்ஷ் இறங்கினர். வார்னர் 34 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அவருக்கு பதில் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். 16.2 ஓவர்  முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்தது. ஸ்மித் 24,  மார்ஷ் 49 ரன்கள் எடுத்திருந்தனர்.  2 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற ஆக்ரோஷத்துடன் ஆஸ்திரேலியா ரன்களை சேர்த்து வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!