Skip to content

மாநிலங்களவைத் தேர்தல்….ஜூன் 2இல் கமல் மனு தாக்கல்?

மாநிலங்களவைத் தேர்தலில் ஜூன் 2ஆம் தேதி மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில்  எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடியவுள்ளதால் ஜூன் 19ல் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மநீம இடம்பெற்ற நிலையில், அக்கட்சிக்கு மக்களவைத் தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படவில்லை, இருப்பினும் 2026ம் ஆண்டு மாநிலங்களை சீட் வழங்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் மநீம சார்பில் கமல்ஹாசன் மாநிலங்களவைக்கு செல்வது உறுதியாகி உள்ளது.இதனையடுத்து மாநிலங்களவைத் தேர்தலில் ஜூன் 2ஆம் தேதி மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!