Skip to content

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ராஜ்யசபா எம்பிக்கள்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 2026 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மற்றும் தே.மு.தி.க. கட்சியைச் சேர்ந்த எல்.சுதீஷ் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இன்று (10.3.2026), மாலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.கழக வேட்பாளர்கள் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மற்றும் தே.மு.தி.க. கட்சியைச் சேர்ந்த எல்.சுதீஷ் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதுபோது, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!