அப்பா, உங்கள் நினைவுகள் என்னை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்துகிறது. உங்களின் நிறைவேறா கனவுகளை நிறைவேற்றுவதே எனது தீர்மானம். அவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவேன்.” என்று ராஜீவ் காந்தி நினைவு தினத்தை ஒட்டி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இன்று ராஜீவ் காந்தியின் 34-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி டெல்லியில் உள்ள வீர் பூமியில் ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தனது தந்தை நினைவு தினத்தையொட்டி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “தந்தையே, உங்கள் நினைவுகள் என்னை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்துகிறது. உங்களின் நிறைவேறா கனவுகளை நிறைவேற்றுவதே எனது இலக்கு. நிச்சயம் நிறைவேற்றுவேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் பலரும் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தங்கள் சமூக வலைதள பக்கங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.