Skip to content

வாக்கு திருட்டு: பீகாரில் ராகுல் நடைபயணம்

பீகார் மாநிலத்தில் வரும்  இன்னும்  சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் அங்கு 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது.  இந்த வாக்கு திருட்டு  கண்டித்து  நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்.பிக்கள்  போராடி வருகிறார்கள்.  சட்ட நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில்  வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்  வகையில்  வரும் 17-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு பீகாரில் ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

சட்டீஸ்கர்  முன்னாள் முதல்வர் இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.   பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி  பேரணி நிறைவுபெறும்.  இதில் இந்தியா  கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள் என்றும்  பூபேஷ் பாகல்   தெரிவித்தார்.

error: Content is protected !!