பாமக மகளிர் அணி சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் அடுத்த மாதம் 10ம் தேதி மகளிர் மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு நடைபெறும் இடத்தை இன்று டாக்டர் ராமதாஸ் பார்வையிட்டார். பின்னர் பூம்புகாரில் அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இனிமேல் அனைத்தும் முறையாக நடைபெறும். அன்புமணி அவருடைய இல்லத்திற்கு வந்திருக்கிறார்.
பாமக எந்த கூட்டணியில் சேருகிறதோ அந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். பிரதமர் எனது நண்பர். அவரிடம் தமிழ்நாட்டுக்கான நிதியை கேட்டு பெறுவோம். கேட்டு தான் வாங்கணும். தட்டுங்கள் திறக்கப்படும்.
அறநிலையத்துறையில் கூடுதல் நிதி இருந்தால், அந்த பணத்தில் கல்லூரி கட்டுவதில் தவறில்லை.
அன்புமணி அம்மா பிள்ளையா, அப்பா பிள்ளையா என்ற கேள்விக்கு…… அம்மா பிள்ளை, அப்பா பிள்ளை என்று பதில் அளித்தார்.
திமுகவுடன் நீங்கள் கூட்டணி சேருவீர்களா, அல்லது அதிமுகவுடன் சேருவீர்களா என கேட்டதற்கு, ஜாலி மூடில் இருந்த ராமதாஸ், இந்த 2 விரல்களில் ஒன்றை தொடுங்கள் நிருபரிடம் நீட்டினார். அப்போது அவர் ஒரு விரலை தொட்டார்.
அதற்கு ராமதாஸ், நீங்கள் நினைத்தது நடக்கும் என சிரித்துக்கொண்டே கூறினார்.
நீங்கள் திமுக கூட்டணியில் சேரப்போவதாக சொல்கிறார்களே என்ற கேள்விக்கு……
10 காக்கா பறந்தது. அதில் 5 வெள்ளை காக்கா,. அந்த வெள்ளை காக்கத்தான் சொல்லி இருக்கும். அந்த வெள்ளை காக்கா உங்களுக்கு சொந்தமா? இன்று யாரும் கட்சி தொடங்க வில்லை. தொடங்கி இருந்தால் நீங்கள் எல்லாம் அங்கே போய் இருப்பீர்கள். வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணி உள்பட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.