கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஷர்னூர் அருகே மஞ்சக்கல் பகுதியை சேர்ந்தவர் சவுமியா (வயது 23). இவர் கடந்த 2011 பிப்ரவரி 1ம் தேதி இரவு எர்ணாகுளத்தில் இருந்து ஷஷர்னூருக்கு பயணிகள் ரெயிலில் சென்றுள்ளார். சவுமியா பயணித்த ரெயில் பெட்டியில் அவர் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே ரயில் பெட்டியில் ஒரு இளைஞர் ஏறினார். அவரது தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்த சார்லி தாமஸ் என்ற கோவிந்தசாமி (வயது 30).
தனியாக இருந்த சவுமியாவை பார்த்ததும் கோவிந்தசாமிக்கு காமவெறி பிடித்தது. அவரை கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். இதனால் சவுமியா ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்தார். கோவிந்தசாமியும் கீழே குதித்து ரத்த காயங்களுடன் கிடந்த சவுமியாவை பலாத்காரம் செய்தார். பலத்த காயங்களுடன் தண்டவாளம் அருகே கிடந்த சவுமியாவை ரயில்வே போலீசார் மீட்டு திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2011 பிப்ரவரி 6ம் தேதி சவுமியா இறந்தார். இது தொடர்பாக போலீசார் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து கோவிந்தசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தசாமியை கைது செய்து கண்ணூர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கோவிந்தசாமிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது தூக்கு தண்டனை கிடையாது என்பதால் அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர் கண்ணூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
14 வருடங்களுக்கு பின்னர் அவர் இன்று அதிகாலை சிறையில் இருந்து தப்பினார். சிறிது நேரத்திலேயே அவர் தப்பியது தெரியவந்தது. எனவே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இதற்கிடையே அந்த பகுதி மக்கள் கோவிந்தசாமி அங்க அடையாளங்களை கூறி ஒரு நபர் இந்த பகுதியில் சென்றார் என அடையாளம் காட்டினர்.
பொதுமக்கள், போலீசார் தேடுதல் வேட்டையில் கோவிந்தசாமி பிடிபட்டார். அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பதுங்கி இந்த கோவிநிந்தசாமியை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.