ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி சின்ன மிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது பெற்றோர் இறந்த நிலையில், தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் வீட்டில் இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேஷன் கடை ஊழியர் மயங்கி விழுந்து சாவு
திருச்சி அரியமங்கலம் அற்புத சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் ( 44 ). இவர் பனையக்குறிச்சி ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கே .கே .நகரில் உள்ள ஒரு கடையில் இருந்த போது தனது தொலைபேசியில் வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார். அப்போது அவர் திடீரென மயக்கம் அடைந்தார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சையாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து கே. கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபான பாரில் தகராறு செய்து தாக்கிய 3 பேர் கைது
திருச்சி வடக்கு காட்டூர் பாத்திமா புரம் ஐந்தாவது தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (27 ) இவர் அரியமங்கலம் பகுதியில் உள்ள டாஸ்மாக்
பாரில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதி சேர்ந்த மூன்று வாலிபர்கள் வேண்டுமென்றே குடிபோதையில் ஆனந்தராஜ்டம் தகராறு செய்து, பீர் பாட்டில், மரக்கட்டைகளால் தாக்கினர்.இதில் தலையில் காயம் ஏற்பட்டது இது குறித்த புகார் என்பதில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து அரியமலம் சீனிவாசன்நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் ( 24),பாலசுப்பிரமணியம் ( 28 ). நேருஜி நகர் செல்லையா தெருவை சேர்ந்த கார்த்திக் ( 29 )ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
புகையிலை விற்ற 3 பேர் கைது
திருச்சி , கண்டோன்மென்ட், காந்தி மார்க்கெட், அரசு மருத்துவமனை பகுதியில் புகையிலை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருச்சி ஜங்ஷன் டிடிசி பஸ் நிறுத்தம் அருகே புகையிலை விற்ற
நாமக்கல் மாவட்டம் பெஸ்ட் சாலையை சேர்ந்த மகேந்திரன் ( 33), மற்றும் காந்தி மார்க்கெட் மீன் மார்க்கெட் அருகே புகையிலை விற்ற முத்தரசநல்லூர் காவிரி நகரைச் சேர்ந்த பாஸ்கர் (49),
பாங்கர்ஸ் காலனி அருகே புகையிலை விற்ற ஸ்ரீனிவாச நகரைச் சேர்ந்த ஜெய்சங்கர் (44) கைது செய்து அவர்களிடம் இருந்த 1 கிலோ 500 கிராம் புகையிலை பறிமுதல் செய்தனர்.

