ஆந்திர மாநிலத்தில் இருந்து 14 செம்மரக்கட்டைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஷிப்ட் டிசையர் காரில் கடத்தி வந்துள்ளனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தபோது அங்கிருந்த மற்றொருவரின் காரின் மீது செம்மரகட்டைகளை ஏற்றி வந்த கார் மோதியதில் சேதம் ஏற்பட்டது. ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் செம்மரக்கட்டைகளை ஏற்றி வந்த கார் அங்கிருந்து சென்றதால் சேதம் ஏற்பட்ட காரின் உரிமையாளர் அந்த செம்மரக்கட்டைகளை ஏற்றி வந்த காரை பின் தொடர்ந்து சென்றனர்.
அப்போது கதிரிமங்கலம் அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியில் செம்மரக்கட்டைகளை ஏற்றி வந்த கார் உள்ளே நுழைந்தது அப்போது அங்கு ஜேசிபி
இயந்திரத்தின் மீது மோதி கார் நின்றது. அதன் பின்னர் காரில் பயணித்த 5 நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்கு அங்கிருந்த பொதுமக்கள் தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த கிராமிய போலீசார் காரை சோதனை செய்தபோது காரில் 14 செம்மர கட்டைகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் இது குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் திருப்பத்தூர் வனத்துறையினர்க்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் 14 மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதன் மதிப்பு சுமார் பத்து லட்சம் இருக்கும் எனவும் தகவல் தெரிவித்தனர் மேலும் தப்பிய ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்..