Skip to content

திருவான்மியூர் கொலை வழக்கில் 9 பேரின் விடுதலை ரத்து

2010ல் திருவான்மியூரில் ஏழுமலை என்பவர் கொலை வழக்கில் 9 பேரை விடுதலை செய்த கூடுதல் அமர்வு நீதிமன்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது . 2010ல் முன்விரோதம் காரணமாக திருவான்மியூரைச் சேர்ந்த ஏழுமலையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 16 பேரில் 5 பேர் உயிரிழந்ததால் 9 பேரை குற்றவாளி என ஐகோர்ட் அறிவித்துள்ளது . நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்டீபன்ராஜ், சந்துரு ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகாத சரவணன், அப்பு உள்ளிட்ட 7 பேரை கைது செய்து ஆஜர்படுத்த போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!