Skip to content

தரைக்கடைகள் அகற்றம்… பளிச் ஆனது திருச்சி NSB ரோடு…

  • by Authour

கோர்ட் உத்தரவுப்படி தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோர வியாபாரகடைகளை அகற்றக்கோரி திருச்சி மாநகராட்சி கமிஷனர் நேற்று தெரிவித்தார். தெப்பகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது சாலையோர வியாபாரம் நடத்தி வரும் கடைகளை மதுரைரோடு ஹோலி

கிராஸ் கல்லூரி அருகில் பழைய நகராட்சி அலுவலகம் செயல்பட்ட இடத்தில் மாற்றம் செய்யபட்டது.
கீழ்கரை பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளை காளியம்மன் கோவில் தெருவில் மாநகராட்சிக்கு

சொந்தமான MLCP இடத்தில் மாற்றியமைத்து தந்தது திருச்சி மாநகராட்சி.. இந்தநிலையில் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள சாலையோர கடைகள் அகற்றப்பட்டது. இதனை திருச்சிராப்பள்ளி

மாநகராட்சி மண்டலம் எண் .1 மலைக்கோட்டை தெப்பக்குளம் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தினை மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் ,பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!