Skip to content

திருச்சி பாலக்கரை ரயில்வே சுரங்க பாதை சீர் செய்யும் பணி தீவிரம்

திருச்சி பாலக்கரை ரயில்வே சுரங்கப் பாதையில் மேல் அமைக்கப்பட்டு இருந்த தலா சுமார் 30ஆயிரம் கிலோ எடையுள்ள இரண்டு பழைய இருப்புப் பாதைகளையும் அகற்றிவிட்டு, அரக்கோணத்தில் தயாரிக்கப்பட்டு திருச்சிக்கு கொண்டுவரப்பட்ட தலா 40,000 கிலோ எடையுள்ள புதிய இருப்பு பாதைகளை ரயில்வே துறையில் பணியாற்றும் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்களும் ஒப்பந்த பணியாளர்களும், ராட்சதா கிரேன்களின் உதவியோடு நிறுவினார்கள்.
புதிய இருப்புப் பாதையில், ஸ்டில் கர்டர் என அழைக்கப்படும் இரும்பில் செய்யப்பட்ட குறுக்கு தூண்கள், இருப்பு பாதை தண்டவாளங்கள், இரும்பு ஸ்லீப்பர் எனப்படும் இரும்பு கட்டைகள் உள்பட சுமார் 80 ஆயிரம் கிலோ எடையுள்ள இருப்பு பாதைகளை இன்று நிறுவியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ரயில்வே வழித்தடத்தை சீர் செய்யும் பணிகளும் மின் தடத்தை சீர் செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சுரங்க பாலத்தில் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!