தஞ்சை அருகே வெட்டிக்காடு கொல்லங்கரை பகுதியை சேர்ந்தவர் மணி இவருடைய மனைவி வில்லம்மாள் ( 73). இவர் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தார். தொடர்ந்து கோவில் அருகே செல்லும் கல்லணை கால்வாயில் குளிக்க முடிவு செய்து அங்குள்ள படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது படித்துறையில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி ஆற்றில் விழுந்துள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட வில்லம்மாள் படித்துறையில் உள்ள தடுப்பு கம்பிகளை பிடித்துக் நீந்தி கொண்டிருந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே தஞ்சை பெரிய கோவில் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் தீயணைப்பு நிலைய பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) கணேசன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று கம்பியை பிடித்துக் கொண்டிருந்த மூதாட்டியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
தஞ்சை அருகே ஆற்றில் விழுந்த மூதாட்டி பத்திரமாக மீட்பு…
- by Authour
