கோவை, கோனியம்மன் கோவிலில் புதிதாக கட்டப்படவுள்ள சமையல் கூடத்திற்காக
ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அஸ்திவாரம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது
அருகில் உள்ள அபார்ட்மெண்ட் மற்றும் கோவிலுக்கு இடையே இருந்த கருங்கல் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவர் விழுந்ததால் அபார்ட்மெண்ட்டின் 2-ம் பிளாக்கில் 4 மாடிகளில் 30 குடியிருப்புகள் உள்ள நிலையில், இடிந்து விழுந்த காம்பவுண்டு சுவர் தரைதள குடியிருப்புகளின் மீது விழுந்ததால்
பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகம், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்

றும்
கட்டுமான ஒப்பந்ததாரர் ஆகியோர் கடந்த 24-12-2025 அன்று அபார்ட்மெண்ட் அலுவலகத்திற்கு வந்து
குடியிருப்புவாசிகள் மற்றும் சங்க நிர்வாகிகளிடம் எந்தவித பாதுகாப்பு குறைபாடும் ஏற்படாமல்
சேதங்களை விரைவில் சரி செய்து தருவதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. புதிய சமையல் கூடம் கட்டுமான பணிக்காக அஸ்திவாரம் அமைக்கும் போது தனித்தனி பில்லர் குழிகள் எடுக்காமல், காம்பவுண்டு சுவரை ஒட்டியும் அதன் அஸ்திவாரத்தை விட ஆழமாக மொத்த நீளத்திற்கும் ஒரே குழியாக தோண்டியதால்தான் இந்த காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்ததாக
குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரரும், TN 60 T 2394 என்ற பதிவு எண்ணைக் கொண்ட ஜே.சி.பி. இயந்திரத்தை இயக்கிய டிரைவரும், அதற்கான வரைபடத்தை வழங்கிய துறை அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே பாதுகாப்பு ஏற்பாடுகள் கோரி 26-12-2025 அன்று பி4 காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, அபார்ட்மெண்ட்டில் ஏற்பட்ட சேதங்களை விரைந்து சரி செய்து தரவும், தற்போது திறந்த வெளியில் உள்ள நிலையில் 81 குடியிருப்புவாசிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

