ஒன்றிய அரசு ஓய்வூதியர்களுக்கு எதிரான நிதி திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கரூரில் நடைபெற்ற
தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் 2வது மாநில மாநாட்டில் தீர்மானம்.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் 2வது மாநில மாநாடு கரூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநிலத்தலைவர் கோ.முரளிதரன் தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் ந.பர்வதராஜன் செயல் அறிக்கை வாசித்தார். மேலும் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது..
ஒன்றிய அரசு 25.03.2025 அன்று நாடாளுமன்றத்தில் ஓய்வு ஊதியர்களுக்கு எதிராக இயற்றப்பட்ட நிதி திருத்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.இல்லை என்றால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை போராட்டம் நடத்த இந்த மாநாட்டில் முடிவெடுத்துள்ளோம்.
திமுக தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல ஓய்வுதியருக்கு 70 வயது ஆனவுடன் 10 சதவீத ஓய்வூதிய நிதியை வழங்க வேண்டும். அதே போல பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.
ஒரு கோடி அரசு ஊழியர்களின் கோரிக்கைளை தமிழக அரசு நிறைவேற்ற விட்டால் வரும் சட்டமன்ற தேர்தலில் அது எதிரொலிக்கும்.
நீடிக்கப்பட்ட ஓய்வு பெறும் வயதினை மீண்டும் 58 ஆக குறைத்து படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். இது போல பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறினார்.

