Skip to content

கரூரில் ஓய்வு நீதிபதி அருணா ஜெகதீசன்.. 2வது நாளாக விசாரணை..

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று இரண்டாவது நாளாக சம்பவம் நடைபெற்ற இடம் உயிரிழந்தவர்கள் வீட்டில் ஆறுதல் கூறிய பிறகு விசாரணை. நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெருப்பில் சிக்கி இதுவரை 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு . இந்த நிலையில் நேற்று பிற்பகல் விசாரணையை தொடங்கினார் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் சம்பவம் நடைபெற்ற இடம்

மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து விசாரணையை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக விசாரணையில் ஈடுபட்ட சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும், உயிரிழந்தவர்கள் வீடு, மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சென்று இரண்டாவது நாளாக விசாரணையை தொடங்கியுள்ளார். குறிப்பாக வேலுச்சாமி புரத்தில் உயிரிழந்த நபர்களின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய பிறகு அவர்களிடம் என்ன நடந்தது எப்படி நடந்தது என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணையை தொடங்கியுள்ளார்.

error: Content is protected !!