திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஆசிரியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் ( 61).ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்.இவர் குடும்பத்த தகராறில் வீட்டை விட்டு வெளியே வந்து மது அருந்தியுள்ளார்.ஏற்கனவே இவர் குடிப்பழக்கம் உடையவர்.இன்னிலையில் திருச்சி இபி ரோடு பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பிணமாக கிடந்தார்.அதைப் பார்த்தவர்கள் கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.தகவரின் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் குமாரவேல் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மத்திய சிறை கைதி உயிரிழப்பு …போலீசார் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் பாரதிபுரம் 7 -வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 59).இவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றவர்.இவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் கண்ணனுக்கு மூச்சு திணறல் மற்றும் கிட்னி செயல் இழப்பு இருந்துள்ளது.உடனே அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மத்திய சிறை அதிகாரிகள் சேர்த்தனர்.ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து திருச்சி மத்திய சிறைச்சாலை அதிகாரி வெங்கடசுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுலோச்சனா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

