திருச்சி, தில்லைநகர் 4 -வது கிராஸை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் ராமசாமி (72). ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்.
இவரது மனைவி மணிமேகலை ( 66). இவரது மகன் வெங்கடாசலபதி. இவர் ஹார்லிக்ஸ் கம்பெனியில் பாம்பேயில் தங்கி சீனியர் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமிக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை ஆகிய நோய்கள் இருந்து வந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் ராமசாமி வீட்டு கார் பார்க்கிங்கில் உள்ள செட்டில் பீமில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் திருச்சி தில்லை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
