Skip to content

அரிசி கடை அதிபர் மகன் வெட்டி படு கொலை.. பிரபல ரவுடிகள் கைது

 

திருச்சி வரகனேரி தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் .இவருக்கு அழகேஸ்வரன்

(வயது 37) மற்றும் உமா சங்கர்(வயது33).
என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இதில் அழகேஸ்வரன் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார்.
உமாசங்கர் சென்னையில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில்
தீபாவளியை முன்னிட்டு நேற்று உமாசங்கர் திருச்சி வந்திருந்தார். நேற்று நள்ளிரவு உமா சங்கர் மற்றும் அழகேஸ்வரன் இருவரும் வரகனேரி பெரியார் நகர் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மூன்று பேர்
சாலையை மறித்தவாறு நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த
சகோதரர்கள் இருவரும் இதனை தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இருதரப்புக்கும் இடையே வாய் சண்டை ஏற்பட்டு ஒரு கட்டத்தில் அடிதடி தகராறு ஏற்பட்டது.
அப்போது அந்த மூன்று பேரும் சேர்ந்து அரிவாளால்அழகேசன், உமா சங்கர் சகோதரர்களை வெட்டியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த உமாசங்கர் சம்பவ இடத்திலேயேதுடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவத்தில்
படுகாயம் அடைந்த அழகேஸ்வரனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாகதிருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காந்தி மார்க்கெட் போலீசார் விரைந்து சென்றனர். இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு
விசாரணை நடத்தினர்.விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து தகவல் தெரிய வந்தது. இதையடுத்து
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வரகனேரி தெற்கு பிள்ளை யார் கோவில் தெருவை சேர்ந்த மாஞ்சா வேலு (வயது 27) மதுரை ரோடு ஜீவா நகரை சேர்ந்த ஜெய சூர்யா (வயது 25) மற்றும் வரகனேரி பகுதியை சேர்ந்த மோகன் (வயது 29) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இதில் மாஞ்சா வேலு, ஜெய சூர்யா இருவரும் பிரபல ரவுடிகள் என்பதும், இவர்கள் மீது காந்தி மார்க்கெட், உறையூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த கொலை சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.படுகாயம் அடைந்த அழகேசன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தீபாவளி நாளில் கொலை சம்பவம் நடந்தது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

error: Content is protected !!