தமிழகத்தில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொது சுகாதாரத்துறை
அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;
*பகல் நேரங்களில் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் வீட்டை விட்டு வெளியே வர
வேண்டாம்.
- முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்துக் கொள்ளவும்
- கட்டட வேலை செய்வோர், புலம்பெயர் தொழிலாளர்கள் வெயிலில் பணியாற்ற வேண்டாம்.
- நீர்ச்சத்து குறைபாட்டால் வாந்தி, மயக்கம், உடல் சோர்வு ஆகியவற்றால் பாதிப்பு
ஏற்பட வாய்ப்பு உள்ளது. - கட்டாய தேவைக்காக வெளியே செல்ல நேர்ந்தால், குடை எடுத்து செல்லவும்.
வெளியே செல்ல நேரிட்டால், தளர்வான, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணியவும். குடை, தொப்பி மற்றும் சன்கிளாஸ் பயன்படுத்தவும். - மது அருந்துதல், காபி, தேநீர் மற்றும் செயற்கை குளிர்பானங்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
- வெயில் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க இளநீர், பழச்சாறு, நுங்கு அருந்தவும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

