Skip to content

ஜெயங்கொண்டம் அருகே வீட்டை அடித்து நொறுக்கியதற்கு நீதி கேட்டு சாலைமறியல்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் ரங்கதுரை இருவருக்கும் சொந்தமான இடத்தில் வீடு கட்டி உள்ளனர். இந்நிலையில் அவரது உறவினர்களுடன் இடத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கமலக்கண்ணனுக்கு சொந்தமான சுமார் 2 லட்சம் மதிப்புள்ள சிமெண்ட் சீட் கொட்டகை வீட்டை எதிர் தரப்பு உறவினர்கள் அடித்து நொறுக்கி முற்றிலும் சேதப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கமலக்கண்ணன் மற்றும் ரெங்கதுரை

உறவினர்கள் கும்பகோணம் – ஜெயங்கொண்டம் சாலையில் கோடங்குடி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த மறியலில் ரெங்கதுரை மனைவி சரளா நீதி வேண்டும். நீதி வேண்டும். என்ற வாசகங்கள் அடங்கிய பேனரை கையில் ஏந்தியவாறு பஸ்களை மறித்து மறியலில் ஈடுபட்டார். மேலும் இதற்கு நீதி கிடைக்காத பட்சத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறி மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தா.பழூர் போலீசார் மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அகற்றினர்‌. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!