Skip to content

திருச்சியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு…

  • by Authour

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பழனியப்பன் தலைமையில் திருச்சி சமயபுரம் டோல்பிளாசா அருகே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மோட்டார் வட்டாரப் போக்குவரத்து அலுவல பழனியப்பன் கிழக்கு நடராஜன் மேற்கு தலைமையில் நடைபெற்ற இந்த கல்லூரி மாணவிகள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த

விழிப்புணர்வு வாசகங்களுடன் பேரணியாக சென்றனர்.

அதனை தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் செந்தில் நடராஜன் மற்றும் போக்குவரத்து துறையினர் சாலை வெங்கடேசன் அன்பு பூங்கொடி மற்றும் ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!