Skip to content

சாலை பாதுகாப்பு- கரூரில் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பேரணி

கரூரில் 37-வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கரூர் மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன ஓட்டுனர்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார்.

இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி கரூர் அரசு கலைக்கல்லூரியில் நிறைவு பெற்றது.

இந்த பேரணியில் இரு சக்கர வாகனங்களில் இருவருக்கும் மேல் செல்வதை தவிர்ப்போம், சாலையில் போட்டி போட்டுக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம், குடிபோதையில்

வாகனம் ஓட்ட வேண்டாம், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்ட வேண்டாம், இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்துதான் ஓட்ட வேண்டும், சாலை விதிகளை மீறிவது இழிவான

செயல் என எண்ண வேண்டும், ஓட்டுநரின் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்ட வேண்டாம், சாலை விதிகளை மதித்து விபத்தினை தவிர்ப்போம் உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு இருசக்கர ஓட்டுநர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!