சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
18 பள்ளி, கல்லூரியில் இருந்து வந்திருந்த சுமார் 2,000 மாணவ-மாணவிகள், “தலைக்கவசம் அணிவோம், உயிர் காப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் மாநகரின்

முக்கிய பகுதிகளான ஜவகர் பஜார், பழைய பேருந்து நிலைய ரவுண்டானா வழியாக மீண்டும் திருவள்ளுவர் மைதானத்திற்கு வந்தனர். சுமார் மூன்று கிலோமீட்டர் இந்த பேரணி நடைபெற்றது.
பேரணியில் உரையாற்றிய செந்தில் பாலாஜி தமிழக முதல்வரால் கொண்டுவரப்பட்ட ‘குட்டி போலீஸ்’ திட்டத்தின் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு தூதுவர்களாகச் செயல்பட வேண்டும். கரூர்

மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

