உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இப்போது கிரிக்கெட்டில் மவுசு கூடி உள்ளது. அதே நேரத்தில் ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடும் மும்பை அணி நிர்வாகம் ரோகித்தை கண்டுகொள்ளவில்லை. ஏற்கனவே ரோகித்திடம் இருந்த கேப்டன் பதவியை பறித்தது. ஆனாலும் அவர் வாய் திறக்கவில்லை.
வரும் 2025ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. அப்போது ரோகித்தை ஏலம் எடுக்க மும்பையை தவிர மற்ற எல்லா அணி நிர்வாகமும் ஆவலுடன் உள்ளது. இவர்களில் குறிப்பாக டில்லி, லக்னோ அணிகள் ரோகித்தை ரூ.50 கோடி வரை கொடுத்து ஏலம் எடுக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.அப்படி 50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டால் ஐபிஎல் வரலாற்றில் இது தான் உச்சபட்சமாக இருக்கும்.