Skip to content

ரோப் கார் கேபிள் அறுந்து விபத்து; 6 பேர் பலி

  • by Authour

குஜராத் மாநிலம் பஞ்ச்மகால் மாவட்டம் பவகவ் மலையில் இந்து மத கடவுள் மகாகாளிகா கோவில் உள்ளது. மலையில் 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு 2 ஆயிரம் படி ஏறி செல்ல வேண்டும். இதனால் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் சேவையும்  உள்ளது. இந்த ரோப் காரில் அவ்வப்போது சரக்கு பொருட்களும் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில், இன்று மாலை 3 மணியளவில் பவகவ் மலையில் இருந்து  ரோப் கார் மூலம் சரக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு  மலை அடிவாரத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். அந்த ரோப் காரில் மொத்தம் 6 பேர் பயணித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கேபிள் அறுந்து ரோப் கார் கீழே விழுந்தது. இந்த கோர விபத்தில் ரோப் காரில் பயணித்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் உயிரிழந்த 6 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

error: Content is protected !!