திருச்சி அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 25).கார்பெண்டர் இவர் தனது நண்பருடன் அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகில் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த இரண்டு ரவுடிகள் நவநீதகிருஷ்ணனிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் கொடுத்த மறுத்ததால் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்தனர். இதில் காயமடைந்த நவநீதகிருஷ்ணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து நவநீதகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஆசைமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார். பாதுஷா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இருவரும் ரவுடிகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு… 2 வாலிபர்கள் எஸ்கேப்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன்.இவரது மனைவி ஜனனி (வயது 27).ஜனனி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் மன்னார்புரம் பகுதியில் மதுரை பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம வாலிபர்கள் ஜனனியின் கழுத்தில் கிடந்த இரண்டே முக்கால் பவுன் தாலி செயினை அறுத்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஜனனி கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து நகை பறித்து தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வருகிறார்.
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
திருச்சி பொன்மலை, பாலக்கரை பகுதிகளில் கஞ்சா அதிக அளவில் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது .இதையடுத்து அந்தந்த போலீஸ் சரக சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் பொன்மலைப்பட்டி பஸ் நிலையம் பகுதியில் கஞ்சா விற்றதாக ஜிஷ்ணு என்ற வாலிபரும், மேலப்புதூர் பஸ் ஸ்டாப் பகுதியில் கஞ்சா விற்றதாக துவாரகன் என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக சரவணன் என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.