Skip to content

பெண்ணின் டூவீலரை திருடிய ரவுடி கைது

  • by Authour

திருச்சி கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் முருகன். இவரது மனைவி சண்முகவள்ளி (வயது 36).இவர் தனது வீட்டின் முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார்.பின்னர் வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனத்தை காணவில்லை.இது குறித்து சண்முகவள்ளி கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜராஜேஸ்வரி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.இந்நிலையில் இருசக்கர வாகனத்தை திருடியதாக தினேஷ் (32) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் ,பிரபல ரவுடி என்பதும் குறிப்பிடத்தக்கது .அவரிடம் இருந்து இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!