Skip to content

கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி திருச்சியில் கைது…

திருச்சியில் சத்திரம் பஸ் நிலையம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சரித்திர பதிவேடு ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி, திருவெறும்பூர் பாப்பாகுறிச்சி சாலையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( 48 )இவர் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே வந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் இவரிடம் ரூபாய் 2000 பணம் கேட்டார். அவர் தர மறுக்கவே அந்த மர்ம நபர் ராமகிருஷ்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து கீழ சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த மயில் தினேஷ் (25 )என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!