Skip to content

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்..

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர் குடும்பத்துக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கினார்.

 

மதுரையில் 1.6.2025 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “திமுக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு கட்சி சார்பில் பத்து இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்.” என்று அறிவித்திருந்தார்.  அந்த வகையில் கடந்த 2.6.2025 அன்று திமுக உறுப்பினரான சரிதா, தனது சொந்த ஊரான இறையனூர் கிராமத்தில் செல்வதற்கு திண்டிவனத்தை கடந்து சென்றபோது, செயின்ட் ஜோசப் பள்ளி எதிரே உள்ள சர்வீஸ் சாலை பக்கத்தில் இருசக்கர வாகனம் மோதி, பின் மண்டையில் பலத்த அடிபட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது குடும்ப நிவாரண நிதியாக, ரூபாய் பத்து இலட்சத்திற்கான காசோலையினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சரிதாவின் கணவர் எஸ்.கண்ணனிம் இன்று (02-08-2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் வழங்கினார்.

error: Content is protected !!